மூன்று பிரிவுகளாக பிளவடைந்துள்ள ஐ.தே.க! வெற்றியில் மஹிந்த!

மூன்று பிரிவுகளாக பிளவடைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சி! பாரிய வெற்றியில் மஹிந்த!

சமகாலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக ஐக்கிய தேசிய கட்சி மூன்றாக பிளவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாட்டில் ஏற்பட்ட பிரதமர் நெருக்கடி காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் ஒரு தரப்பினர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவி கிடைக்க வேண்டும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு போதும், ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்க மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

நெருக்கடியான நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு பிரதமர் பதவி வழங்க வேண்டும் என கட்சியின் பெரும்பான்மையினோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட கரு ஜயசூரியவுக்கு பிரதமர் பதவி வழங்க வேண்டும் என இன்னும் ஒரு தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக ஐக்கிய தேசிய கட்சி மூன்று பிரிவுகளாக பிளவு பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை, சர்ச்சைக்குரிய பிரதமரான மஹிந்த ராஜபக்ஷவுக்கு பெரும் நன்மையாக அமைந்துள்ளது.

நாளைய தினம் நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், மஹிந்த – ரணில் தரப்பினர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை காரணமாக, மஹிந்தவுக்கு சாதகமான நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்மூலம் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்னெடுக்கப்பட்ட அரசியல் தந்திரோபாயம் பாரிய வெற்றி பெற்றுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net