ரணில் மீது பாயப் போகும் சட்டம்! அபராத தொகை விதிக்கப்படுமா?
பதவி நீக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் அலரி மாளிகையை விட்டு வெளியேற வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் அங்கு தங்கியிருந்தால், அவர்கள் சட்டரீதியான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய அவர்களுக்கு எதிராக விதிக்கப்படும் அபராத பணத்தை அவர்கள் செலுத்த நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அபராத பணத்தை அறவிடுவதற்கும், சட்டத்தை செயற்படுத்துவதற்கும், பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் சட்டத்தை செயற்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.