“வெற்றிகொண்டாலும் ஐ.தே.க.வினால் தனித்து ஆட்சியமைக்க முடியாது”

“வெற்றிகொண்டாலும் ஐ.தே.க.வினால் தனித்து ஆட்சியமைக்க முடியாது”

பாராளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டு அதனை வெற்றிக்கொண்டாலும் ஐக்கிய தேசியக் கட்சியினரால் தனித்து ஆட்சியமைக்க முடியாது.

மஹிந்த ராஜபக்ஷ மீது காணப்படும் வைராக்கியத்துக்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி.பியும் தற்போது ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழக்கி வருகின்றதே தவிர ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டு சேர்வதற்காக அல்ல என அமைச்சரவை பேச்சாளரான மஹிந்த சமரசிங்க மற்றும் அமைச்சர் தயாசிறிஜய சேகர ஆகியோர் தெரிவித்தனர்.

122 பெரும்பான்மை இருக்கின்றது என ஐக்கிய தேசியக் கட்சி தற்போது தம்பட்டம் அடித்துக்கொண்டாலும் நாளை தனித்து ஆட்சி அமைத்தால் அவர்களின் 101 பாராளுமன்ற உறுப்பினர்களே காணப்படுகின்றனர்.

ஆனால் எம்மிடம் 104 காணப்படுகின்றது. அந்த வகையில் பாராளுமன்றில் நாமே பெரும்பான்மையை கொண்ட கட்சியாக தற்போது திகழ்கின்றோம் எனவும் குறிப்பிட்டனர்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

Copyright © 1841 Mukadu · All rights reserved · designed by Speed IT net