நாடாளுமன்ற அமர்வு இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பம்!
பல சர்சைகளுக்கு மத்தியில் மீண்டும் நாடாளுமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) கூடுகின்றது.
குறித்த நாடாளுமன்ற அமர்வு இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. இதன்போது தெரிவுக்குழு நியமனம் நடைபெறவுள்ளது.
அந்தவகையில் 12 உறுப்பினர்களை கொண்ட தெரிவுக்குழுவில் பெரும்பாலான இடங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை குறித்த தெரிவுக் குழுவுக்கு, ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன் ரவூப் ஹக்கீம், றிசாட் பதிர்வூதீன் ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் ஆளும் கட்சிக்கா? அல்லது ஐக்கிய தேசிய கட்சிக்கா? அங்கத்துவம் வழங்கப்பட வேண்டும் என்ற சர்ச்சை ஏற்படுவதற்கும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது.