அரசியலமைப்பிற்கு முரணான நிலையில் இருந்து விடுபட வேண்டும்!
நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நடத்துவதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் நிலவும் அரசியலமைப்புக்கு முரணான நிலைமையில் இருந்து விடுபட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
காலியில் நேற்று (வௌ்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இந்த கருத்தை வௌியிட்டார்.
தற்போதைய சூழ்நிலை தொடர்ந்தால், எதிர்கால தலைமுறையினருக்கு அது மோசமான முன்னுதாரணமாக அமைந்து விடும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, தற்போதைய அரசியல் கட்சித் தலைவர்கள் தமது நாளைய அரசியல் செயற்பாடுகளையும், எதிர்கால சந்ததியையும் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என்றும் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க கோரிக்கை விடுத்தார்.