மைத்திரியை ஏமாற்றிய பிரபலம்! அரசியலில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்!
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடாமல் இருக்க தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இரண்டாவது பதவிக் காலத்தின் போது ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை களமிறங்க பொதுஜன பெரமுன கட்சி இணக்கம் வெளியிட்டிருந்தது.
இந்த உடன்படிக்கைக்கு அமையவே பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ, கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தார்.
எனினும் தற்போது ஜனாதிபதிக்கு எதிராக நாட்டில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பு மற்றும் மக்களுக்கு மத்தியில் அவருக்கு காணப்பட்ட பிரபலத்தன்மை பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்நிலையில் பொதுஜன பெரமுன கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவர் பசில் ராஜபக்ச, மைத்திரியை இரண்டாவது முறை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதில் அர்த்தமில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதனால் தனது பதவி காலத்தில் செயற்பட்டு விட்டு செல்வதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தற்போதைய எண்ணமாக உள்ளதென முன்னாள் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் பொதுஜன பெரமுனவை கூட்டணியாக மாற்றி பொதுத் தேர்தல் ஒன்றுக்கு செல்லும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.