லொறி மண்மேட்டில் மோதியதில் விபத்து:சாரதி வைத்தியசாலையில்!
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை தேயிலை தொழிற்சாலை பகுதியில் லொறி ஒன்று மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்து நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டனிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற குறித்த லொறி தலவாக்கலை பகுதியில் மண்மேடு ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த லொறியில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், அவர் பலத்த காயங்களுக்குள்ளாகி லிந்துலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மழை காரணமாக வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்பட்டதனால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து சம்பவித்துள்ளது.
விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.