பெரும்பான்மையை உறுதி செய்த மைத்திரி! பொதுத் தேர்தல் வாபஸ்!
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானியை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்ககை எடுக்கப்பட்டுள்ளது.
மைத்திரி – மஹிந்த தலைமையிலான குழுவினர் பெரும்பான்மை பலத்தினை பெற்றுள்ள நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
எதிர்வரும் 4 நாட்களுக்குள் சமகால அரசாங்கத்தினாால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் 113 என்ற பெரும்பான்மை உறுதியாக நிரூபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மை நிரூபித்த பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றத்தை கலைக்கப்பட்டதற்காக விடுக்கப்பட்ட வர்த்தமான மீளப்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய ஆயுட்காலம் முடியும் வரை நாடாளுமன்றம் தொடர்ந்து செயற்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒன்பதாம் திகதி நாடாளுமன்றம் கலைப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அறிவிக்கப்பட்டதுடன், அடுத்த வருட ஆரம்பத்தில் தேர்தல் நடைபெறும் என வர்த்தகமானி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.