மக்கள் ஒன்றிணைந்தால் மாத்திரமே முடியும்!

மக்கள் ஒன்றிணைந்தால் மாத்திரமே முடியுமென்கிறார் ரவி!

மக்கள் அனைவரும் உரிமைகளுக்காக ஒன்றிணைந்தால் மாத்திரமே பிரச்சினைகளுக்கான தீர்வு நியாயமானதாக அமையுமென தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் ஆட்சி பலத்தை கைப்பற்றும். மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற போராடுவதற்கு அனைவரும் தயார்.

ஆனால் மக்கள் அனைவரும் உரிமைகளுக்காக ஒன்றிணைந்தால் மாத்திரமே பிரச்சினைகளுக்கான தீர்வு நியாயமானதாக அமையும்.

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆட்சி முறையை நீக்குவதற்காகும்.

ஆனால் கடந்த 26 ஆம் திகதி மீண்டும் நாட்டில் சர்வாதிகாரத்தை உருவாக்க ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன வழிவகுத்துவிட்டார்.

பலவந்த ஆட்சியை அமைத்துவிட்டு இன்று பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது தடுமாறிக்கொண்டு இருக்கின்றனர் எனத் தெரிவித்தார்.

ஜனநாயகத்தை வென்றெடுப்பதற்கான மக்களின் நீதிக் குரல் என்ற போராட்டம் ஐக்கிய தேசிய கட்சியின் ஏற்பாட்டில் கண்டி நகரில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டே ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net