ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம் நாளை!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம் நாளைய தினம்(திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது.
இந்த மத்திய குழு கூட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லகஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.
இதன்போது, சமகால அரசியல் நிலைவரம் மற்றும் அடுத்த தேர்தலை எதிர்கொள்ளல் என்பன குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஏனைய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஒன்றை அமைப்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, குறித்த கூட்டத்தில் பங்கேற்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து மத்திய குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் ரோஹன லகஷ்மன் பியதாஸ குறிப்பிட்டுள்ளார்.