“லாபம் நிச்சயம்?: வெளியீட்டுக்கு முன்பே ரூ. 370 கோடி வருமானம் ஈட்டியுள்ள 2.0 படம்!…”,

“லாபம் நிச்சயம்?: வெளியீட்டுக்கு முன்பே ரூ. 370 கோடி வருமானம் ஈட்டியுள்ள 2.0 படம்!…”,

“2.0 படம் வெளியீட்டுக்கு முன்பே தயாரிப்பாளருக்கு லாபத்தை அளிக்க வாய்ப்புள்ளதாக அறியப்படுகிறது…”,

ரஜினி – ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார்.

கதாநாயகி – ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகிவருகிறது.

ரூ. 550 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இதையடுத்து இந்தப் படம் திட்டமிட்டபடி வரும் 29 அன்று வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளிவரவுள்ளதால் இப்படத்துக்கு இந்திய அளவில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

அடுத்த வாரம் 2.0 படம் வெளியாகவுள்ள நிலையில் வெளியீட்டுக்கு முன்பே ரூ. 320 கோடியை வருமானமாக ஈட்டியுள்ளதாக பாலிவுட் ஹங்கமா என்கிற இணைய இதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

2.0 படம் வியாபார ரீதியாக எந்தளவுக்கு லாபகரமாக அமையும் என்று அதில் வெளிவந்துள்ள தகவல்களின் அடிப்படையில் பார்க்கலாம்:

2.0 படத்தின் பட்ஜெட்: ரூ. 550 கோடி

தொலைக்காட்சி உரிமம்: ரூ. 120 கோடி (அனைத்து மொழிகளுக்கும்)

டிஜிடல் உரிமம்: ரூ. 60 கோடி (அனைத்து மொழிகளுக்கும்)

வட இந்திய திரையரங்கு உரிமம்: ரூ. 80 கோடி (அட்வான்ஸ் அடிப்படையில்)

ஆந்திரா / தெலங்கானா திரையரங்கு உரிமம்: ரூ. 70 கோடி

கர்நாடகத் திரையரங்கு உரிமம்: ரூ. 25 கோடி

கேரளத் திரையரங்கு உரிமம்: ரூ. 15 கோடி

இவற்றின் மொத்த வருமானம்: ரூ. 370 கோடி

இதையடுத்து 2.0 படம் வெளியீட்டுக்கு முன்பே தயாரிப்பாளருக்கு லாபத்தை அளிக்க வாய்ப்புள்ளதாக அறியப்படுகிறது.

தமிழ்நாடு மற்றும் வெளிநாட்டு உரிமங்களை தன் வசம் வைத்துக்கொண்டுள்ள லைகா நிறுவனம், வட இந்தியா, ஆந்திரா/தெலங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய பகுதிகளின் விநியோக உரிமங்களைத் தனி நபர்களுக்கு விற்றுள்ளது.

ஆந்திரா/தெலங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய பகுதிகளின் விநியோக உரிமங்கள் அவுட்ரைட் என்கிற முறையில் விற்கப்பட்டுள்ளன.

இதனால் இப்படம் மூலமாகக் கிடைக்கும் லாபத்தை இப்பகுதி விநியோகஸ்தர்கள் லைகாவுடன் பகிர்ந்துகொள்ளமாட்டார்கள்.

ஆனால் வட இந்தியப் பகுதிகளிலிருந்து கிடைக்கும் வசூலில் குறிப்பிட்ட சதவிகிதம் லைகாவுக்குச் செல்லும்;

ரூ. 370 கோடி தற்போது கிடைத்துள்ள நிலையில் முதலீட்டைத் திரும்பப் பெற லைகாவுக்கு இன்னும் ரூ. 130 கோடி கிடைத்தாகவேண்டும்.

தமிழ்நாடு மற்றும் வெளிநாட்டு உரிமங்கள் மற்றும் வட இந்தியப் பகுதிகளில் கிடைக்கும் லாபம் ஆகியவற்றிலிருந்து அந்தத் தொகையை மீட்டுக்கொண்டுவிடமுடியும்.

படம் எவ்வளவு மோசமாக விமரிசனங்கள் பெற்றாலும் இப்பகுதிகளிலிருந்து எப்படியும் ரூ. 130 கோடி கிடைத்துவிடும் என்று அறியப்படுகிறது.

தமிழ்நாட்டிலிருந்து குறைந்தபட்சம் ரூ. 85 கோடி வெளிநாட்டிலிருந்து குறைந்தபட்சம் ரூ. 50 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே எப்படிப் பார்த்தாலும் 2.0 படம் தயாரிப்பாளருக்கு லாபம் ஈட்டும் படமாகவே அமையும் என விநியோக வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும், எஸ்.எஸ். ராஜமெளலியின் பாகுபலி போல இப்படமும் தயாரிப்பாளருக்கு மட்டுமல்லாமல் அதனுடைய வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் லாபத்தை ஈட்டி வசூலில் புதிய சாதனைகளைப் படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net