12 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு!

12 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு!

நிலவும் மழை­யு­ட­னான வானி­லையால் 12 நீர்த்­தேக்­கங்­களின் வான்­க­த­வுகள் திறக்­கப்­பட்­டுள்­ள­தாக நீர்ப்­பா­சனத் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் வசந்த பண்­டார பலு­கஸ்வௌ தெரி­வித்­துள்­ளது.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

மழை­யுடன் கூடிய வானிலை தொடர்­வதால் மட்­டக்­க­ளப்பு, அநு­ரா­த­புரம் மற்றும் ஹம்­பாந்­தோட்டை ஆகிய மாவட்­டங்­க­ளி­லுள்ள நுவ­ரவௌ, மஹ­வி­லச்­சிய, இரா­ஜாங்­கனை, மஹ­க­ன­த­ராவ, பத­கி­ரிய ஆகிய நீர்த்­தேக்­கங்­களின் வான்­க­த­வுகள் திறக்­கப்­பட்­டுள்­ளன.

அத்­துடன், தெப­ரவௌ, தெதுறு ஓயா, முரு­த­வெல, திஸ்­ஸவௌ, வீர­வில ஆகிய நீர்த்­தேக்­கங்­களின் வான்­க­த­வு­களும் திறக்­கப்­பட்­டுள்­ளன.

இந்த நீர்த்­தேக்­கங்­க­ளுக்கு அருகில் தாழ் நிலப்­ப­கு­தி­களில் வாழும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொள்கின்றது என்றார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net