24 மணிநேர விபத்துக்களில் ஏழுவர் பலி !

24 மணிநேர விபத்துக்களில் ஏழுவர் பலி !

நாடளாவிய ரீதியில் நேற்று காலை 6 மணியுடன் நிறைவுபெற்ற 24 மணிநேரத்துக்குள் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிள் விபத்துக்களளில் விபத்துக்களில் மூவரும், முச்சக்கரவண்டி விபத்தில் மூவரும் பாதசாரி ஒருவரும் உள்ளடங்கலாக 15 வயதிற்கும் 65 வயதிற்கும் உட்பட்ட ஏழு பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பணியகம் தெரிவித்துள்ளது.

இவ் விபத்துக்கள் மதுகம, புறக்கோட்டை, ஹங்கம, பண்டாரகம மற்றும் குருநாகல் ஆகிய பிரதேசங்களிலே இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 4489 Mukadu · All rights reserved · designed by Speed IT net