பொலிஸ் உயர் அதிகாரிகளை இன்று சந்திக்கிறார் ஜனாதிபதி!

பொலிஸ் உயர் அதிகாரிகளை இன்று சந்திக்கிறார் ஜனாதிபதி!

ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன பொலிஸ் உயர் அதி­கா­ரி­களை இன்று அவ­ச­ர­மாக சந்­திக்­க­வுள்ளார்.

அதற்­காக பொலிஸ்மா அதிபர், அனைத்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதி­பர்கள் மற்றும் பிரதிப் பொலிஸ்மா அதி­பர்­களை இன்று நண்­பகல் 12.00 மணிக்கு கோட்டை ஜனா­தி­பதி செய­ல­கத்தில் ஆஜ­ரா­கு­மாறு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளார்.

இந்த அவ­சர சந்­திப்­புக்­கான காரணம், எந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­பர்கள், பிரதிப் பொலிஸ் மா அதி­பர்­க­ளுக்கும் தெரி­விக்­கப்­ப­டாதே இந்த அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

எவ்­வா­றா­யினும் நாட்டில் நிலவும் தற்­போ­தைய அர­சியல் சூழல் மற்றும் பொலிஸ் திணைக்­களம் பாது­காப்பு அமைச்சின் கீழ் மீளவும் கொண்­டு­வ­ரப்­பட்ட பின்னர் பொலி­ஸாரின் செயற்­பா­டுகள் எவ்­வாறு அமைய வேண்டும் உள்­ளிட்ட கார­ணிகள் குறித்து கலந்­து­ரை­யா­டவே இந்த அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அரசின் உள்­ளக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net