பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மாவீரர் தினத்தை முன்னிட்டு இரத்த தானம்.

பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மாவீரர் தினத்தை முன்னிட்டு இரத்த தானம்.

தமிழினத்தின் விடுதலைக்காய் தம்மையே ஆகுதியாக்கிய மாவீரர்கள் என்றுமே நினைவுகூரப்பட வேண்டியவர்கள் .

இந்த நாள் புனிதர்களுடைய நாள். தமக்கென வாழாது பிறரின் நன்மைக்காக நமது தேசிய இனத்தின் விடுதலைக்காகவும் தேசிய இனம் தனது தனித்துவத்தை பேணிப் பாதுகாப்பதற்காகவும் எந்தவொரு பிரதியுபகாரத்தையும் எதிர்பாராது உயிரைதுச்சமென மதித்து தமது உயிரை தமிழ் இனத்திற்காக ஆகுதியாக்கிய நாள் நவம்பர் 27.

மாவீரர்களின் தியாகம் அழியாது, மறையாது, அதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பில் தமிழ் சமூகம் உள்ளது.

அதனடிப்படையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் பிரித்தானியாவில் மாவீரர் வாரத்தில் ” மாவீரர்களை நினைவு கூர்ந்து குருதிக் கொடை” என்ற எண்ணக்கருவில் குருதிக்கொடை நிகழ்வானது வருடாவருடம் நடைபெற்று வருகின்றது , அந்த வகையில் கடந்த 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டு மற்றும் சமூக நலன் பிரதி அமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கம் தலைமையில் மாபெரும் குருதிக் கொடை நிகழ்வு பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த நிகழ்வானது காலை 10:00 மணிமுதல் மாலை 5 மணிவரை Tooting Blood Donor Centre, எனும் இடத்தில் மிக உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

இதில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் உட்பட ஏராளமான தேசிய செயற்பாட்டாளர்களும் இக் குருதித்தான நிகழ்வில் இணைத்துக் கொண்டு செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

????????????????????????????????????

Copyright © 8471 Mukadu · All rights reserved · designed by Speed IT net