பிரித்தானிய பாரளுமன்ற உறுப்பினரை சந்தித்து Early Day Motion இற்காக ஆதரவு கோரிய தமிழ் தகவல் நடுவம்.
பிரித்தானிய பாராளமன்ற உறுப்பினர் Frank Field அவர்களை Birkenhead Town Hall இல் 23.11.2018 மாலை 5.00 சந்தித்த தமிழ் தகவல் மையத்தின் செயற்பாட்டாளர்களும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுமான சிவகுரு சஜூபன் தலைமையில் அருளோசன் அருளானந்தம், ,கிருசாந்தன் பாலேந்திரா,நிலாசுதன்
பேரின்பநாதன் ,நிருஷன் விக்னேஸ்வரன்ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்
மேற்படி சந்திப்பில் பிரித்தானிய அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் இலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்தக்கோரியும், இலங்கை சிங்கள அரசாங்கத்தினால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்பதனையும், தொடர்ந்து ஈழத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு வருகின்ற சித்திரவதைகளும் துன்புறுத்தல்கள் தொடர்பிலும் விளக்கப்பட்டது
இவ்விடயங்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளமன்றத்தில் விவாத்த்திற்கு கொணர்வதற்காக பாராளமன்ற உறுப்பினர் Davey, Edward அர்களீர்களின் Early day motion 1480 இற்கு ஆதரவும் வேண்டப்பட்டது
பாராளமன்ற உறுப்பினர் மேற்படி முன்னெடுப்புகளுக்கு தனது பூரண ஆதரவினை தருவதாகவும் கதைக்ப்பட்ட விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.