ஜெயப்பிரதா வேடத்தில் ஹன்சிகா

ஜெயப்பிரதா வேடத்தில் ஹன்சிகா

கிரிஷ் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகும் என்.டி.ஆர். வாழ்க்கைப் படத்தில் ஜெயப்பிரதா வேடத்தில் நடிகை ஹன்சிகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயசுதா வேடத்தில் பாயல் ராஜ்புத் நடிக்கவுள்ளதாகவும் ஜெயப்பிரதா வேடத்தில் தமன்னா நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது ஜெயப்பிரதா வேடத்தில் நடிக்க ஹன்சிகா ஒப்பந்தமாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான மறைந்த என்.டி.ஆர். வாழ்க்கை திரைப்படமாக உருவாக்கப்பட்டு வருகின்றது.

மேலும் இப்படத்தில் என்.டி.ஆராக நடிப்பது என்.டி.ஆரின் மகனும், நடிகருமான பாலகிருஷ்ணா ஆகும். அவரின் மனைவியாக இந்தி நடிகை வித்யா பாலன் நடித்து வருகின்றார்.

குறித்த படத்தில் என்.டி.ஆருடன் நடித்த நடிகைகளின் கதாபாத்திரங்களும் இடம்பெறுவதாகவும் ஸ்ரீதேவி வேடத்தில் ரகுல் பிரீத்தி சிங்வும் சாவித்திரி வேடத்தில் நித்யா மேனனுவும் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net