முப்படைகளின் அலுவலக பிரதானிக்கு விளக்க மறியல்! நீதிமன்றம் அதிரடி!
நீதிமன்றில் சரணமடைந்த பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுனவர்தன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் மாதம் 5ம் திகதி வரை விளக்கமறியலில் கொழும்பு – கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
ரவீந்திரவின் சட்டத்தரணிகள் பிணை கோரிய போதும், நீதவான் அதனை நிராகரித்துள்ளார்.
நீதிமன்றில் சரணடைந்த அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தனவிடம் ஐந்து மணித்தியாலங்களுக்கும் அதிகமாக நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர், அவரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
11 மாணவர்கள் கடத்தல் விவகாரத்தில் பிரதான சந்தேகநபர் நேவி சம்பத்துக்கு அடைக்கலம் கொடுத்தமை தொடர்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ரவீந்திர விஜேகுணரத்னவை நேற்று சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவில் அவரை ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் எனக்கு எந்த உத்தியோகபூர்வ அறிவித்தலும் கிடைக்கவில்லை. எனினும் இன்று நீதிமன்றில் ஆஜராகத் தயார் என தெரிவித்திருந்தார். அதன்படி அவர் இன்று நீதிமன்றில் ஆஜரானார்.