விண்வெளியில் கிடைத்த அதிசயம்!

விண்வெளியில் கிடைத்த அதிசயம்!

சர்வதேச விண்வெளி மையத்தில், 20 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன பிளாப்பி டிஸ்க்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கணினிகள் பயன்படுத்தும் ஆரம்ப காலத்தில் பிளாப்பி டிஸ்க்குகள் பயன்படுத்தப்பட்டன.

ஆனால், தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் இந்த டிஸ்க்குகள் பயன்பாட்டில் இல்லை.

இந்நிலையில், சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் உருவாக்கப்பட்டு 20 ஆண்டுகள் கடந்துள்ள விடயம், கடந்த ஒரு வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, Space Station-யில் இருக்கும் பழைய பொருட்களை எல்லாம் தேடி பிடித்து, அதன் புகைப்படங்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

இந்த புகைப்படங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது. அப்போது, 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பிளாப்பி டிஸ்குகள் அதில் கண்டுபிடிக்கப்பட்டன.

இவை Space Station உருவாக்கப்பட்ட சில நாட்களில் மொத்தமாக காணாமல் போய் இருக்கலாம் என கூறப்படுகிறது.

எனவே இந்த டிஸ்க்குகளில் 20 ஆண்டுகளுக்கு முந்தைய முக்கியமான விடயங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவற்றை பூமிக்கு கொண்டு வந்த பின்னர் சோதனை செய்ய இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net