சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தீர்மானங்களை எடுப்பதே ஜனநாயகம்!

சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தீர்மானங்களை எடுப்பதே ஜனநாயகம்!

சிறுபான்மையை கொண்ட தரப்பினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்மானங்களை எடுப்பதே உண்மையான ஜனநாயகம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

காலி மாவட்ட தேர்தல்கள் செயலகத்தில் (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

யாழில் தமிழ் மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையை கொண்டிருப்பதால் அங்கு சிங்கள மொழி பேசுபவர்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது.

அதேபோன்று ஹம்பாந்தோட்டையில் சிங்களம் பேசுவர்கள் பெரும்பான்மையாக இருப்பதால் தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது எனவும் இதன்போது அவர் குறிப்பிட்டார்.

Copyright © 7894 Mukadu · All rights reserved · designed by Speed IT net