நாங்கள் எந்த தேர்தலுக்கும் தயார்!

நாங்கள் எந்த தேர்தலுக்கும் தயார்!

ஐக்கிய தேசிய முன்னணி எந்த தேர்தலுக்கு தயாராக இருப்பதாகவும் எனினும் அந்த தேர்தல் ஒக்டோபர் 26 ஆம் திகதி முன்னர் நிலைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் எனவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்தப்படும் போது இடைக்கால அரசாங்கத்தை நடத்திச் செல்வது சிரமமானது.

ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்னரான நிலைமையில், பொதுத் தேர்தலோ, ஜனாதிபதித் தேர்தலோ அல்லது மாகாண சபைத் தேர்தலோ எதுவாக இருந்தாலும் அதற்கு ஐக்கிய தேசிய முன்னணி தயாராக இருக்கின்றது.

ஐக்கிய தேசிய முன்னணி எந்த தேர்தலையும் ஒத்திவைக்கவில்லை நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தேர்தல் நடத்துவதை தடுத்தது எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 4366 Mukadu · All rights reserved · designed by Speed IT net