Port Perry பகுதியில் வாகன விபத்து – ஒருவர் உயிரிழப்பு

Port Perry பகுதியில் வாகன விபத்து – ஒருவர் உயிரிழப்பு

வாகனம் மோதியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று (புதன்கிழமை) இரவு Port Perry பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நேற்று மாலை 6 மணியளவில் ஐலன்ட் வீதிப் பகுதியில் இந்த விபத்து சம்பவித்ததாக டூர்ஹம் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தின் போது வயதான ஆண் ஒருவரே வாகனத்தினால் மோதப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள விசாரணை அதிகாரிகள், அவர் மீது மோதிய வாகனம் குறித்த தகவல்கள் எதனையும் உடனடியாக வெளியிடவிலலை.

சம்பவத்தினை அடுத்து அந்த பகுதி ஊடான போக்குவரத்துகளை தடை செய்த காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Copyright © 8731 Mukadu · All rights reserved · designed by Speed IT net