ஜனாதிபதி விளையாடுவதை நிறுத்துங்கள்!

ஜனாதிபதி விளையாடுவதை நிறுத்துங்கள்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஏற்படுத்தப்பட்ட அரசியல் நெருக்கடி நிலையை அவரே திருத்தியமைக்க வேண்டும் என ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.

ஜே.வி.பி கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அக்கட்சியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா, இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பானது சர்வதேச சமூகத்திற்ன் பொழுதுபோக்காக மாறிவிட்டது, குறிப்பாக அவர்களை எவரும் ஏற்கொள்ளவில்லை இந்நிலையில் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்து விளையாடிக்கொண்டிருக்கின்றார்கள் என தெரிவித்தார்.

அவர்கள் நாடாளுமன்றத்திக்கு வருகை தந்து உணவருந்திவிட்டு அங்கு அறை ஒன்றினுள் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பின்னர் பின் கதவால் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறுகின்றனர்.

இது எந்தவொரு நாடாளுமன்றத்திலும் நடக்காத செயற்பாடு என கூறிய அவர், இவை அனைத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவால் நிகழ்ந்தது என்றும் அதற்கு அவரே பொறுப்பு கூறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net