பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள செய்தி!
பொதுத் தேர்தலுக்கான அழைப்பை மீண்டும் வலியுறுத்தி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரம் தொடர்பில் விளக்கும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆற்றிய விசேட உரையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பிரதமர் ஆற்றிய உரையில்,
“கடந்த ஆட்சி காலத்தில் விடுதலை புலிகளை ஒழித்து வடக்கு மாகாணசபை தேர்தலை நடத்தியிருந்தேன்.
நாட்டில் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்ட பொதுத் தேர்தலுக்கு செல்வதே ஒரே வழியாகும். ஆனால் தற்போது சில மாகாண சபைக்கான பதிவிக்காலம் முடிவடைந்தும் ஐக்கிய தேசிய கட்சி தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 26 ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது தேர்தலை நடத்துமாறு அழைப்பு விடுத்திருந்த போதும், இந்த எதிர்க்கட்சிகள் தேர்தலுக்கு முகம் கொடுக்க பயன்படுகின்றது.
குறிப்பாக ஜனாதிபதி ஒருவர் தேர்தலை நடத்துமாறு அறிவித்த போது எதிர்க்கட்சிகள் எதிர்த்த சம்பவம் இலங்கையில் இதுவே முதல் தடவை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.