மேற்கிந்திய தீவுகள் பயிற்சியாளரும் விண்ணப்பிக்கவில்லை!

மேற்கிந்திய தீவுகள் பயிற்சியாளரும் விண்ணப்பிக்கவில்லை!

மேற்கிந்திய தீவுகள் தேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப்பயிற்றுவிப்பாளர் பதவிக்கு தான் விண்ணப்பிக்க வில்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பளர் சந்திக ஹத்துருசிங்ஹ இலங்கை கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளார்.

அண்மையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கான பயிற்றுவிப்பளர் வெற்றிடத்திற்காக மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டிருந்த பெயர் பட்டியலில் ஹத்துருசிங்ஹவினதும் பெயர் உள்ளடக்கப்பட்டிருந்து.

இந்நிலையில் அவர் மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு விண்ணப்பிருந்ததாக ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டிருந்தன.

எனினும் தான் அவ்வாறு எந்த விண்ணப்பமும் மேற்கொள்ளவில்லை என மறுப்பு தெரிவித்து ஹத்துருசிங்ஹ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net