வளர்ந்து வரும் ஆசிய அணிகளுக்கான கிரிக்கெட்

வளர்ந்து வரும் ஆசிய அணிகளுக்கான கிரிக்கெட் – இலங்கை குழாம் அறிவிப்பு

எதிர்வரும் டிசம்பர் 06 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள வளர்ந்து வரும் ஆசிய அணிகளுக்கான கிரிக்கெட் கிண்ண தொடருக்கான இலங்கை குழாம் பெயரிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் இலங்கை இணைந்து இம்முறை வளர்ந்து வரும் ஆசிய அணிகளுக்கான கிரிக்கெட் கிண்ண தொடரை நடாத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணியே இத்தொடரை நடாத்தவிருந்த நிலையில், பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களால் இந்திய கிரிக்கெட் சபை பாகிஸ்தானுக்கு இந்திய வீரர்களை அனுப்ப முடியாது எனத் தெரிவித்திருந்த நிலையிலேயே இலங்கையும் இணைந்து இத்தொடரை நடாத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.

இந்திய அணி விளையாடும் போட்டிகள் மற்றும் நொக் அவுட் சுற்றுப் போட்டிகள் யாவும் இலங்கையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிய கிரிக்கெட் சபையினால் கடந்த 2013 இல் ஆரம்பிக்கப்பட்ட இத்தொடரில் 23 வயதுக்குட்பட்ட வீரர்களைக் கொண்டோர் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் முதலாவது தொடரில் (2013) சம்பியனாக இந்தியா தெரிவானதோடு, 2017 இல் இடம்பெற்ற இரண்டாவது தொடரில் இலங்கை அணி சம்பியனானமை குறிப்பிடத்தக்கது.

நடப்பு சம்பியனான இலங்கை அணி இம்முறையும் கிண்ணத்தை கைப்பற்றும் எதிர்பார்ப்புடன் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று (சனிக்கிழமை) பெயரிடப்பட்டுள்ள இலங்கை அணியின் தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்பட்ட இளையோர் கிரிக்கெட் தொடரில் சரித் அசலங்க அபாரமாக ஆடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இறுதிப்போட்டியில் சதம் விளாசியிருந்ததுடன் போட்டியினதும் தொடரினதும் சிறப்பாட்டக்காரராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

உப அணித்தலைவராக மற்றுமொரு நம்பிக்கை நட்சத்திரமான சத்து அசான் தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன் நியூசிலாந்து தொடருக்காக உள்வாங்கப்படாதிருந்த அசேல குணரத்ன இளையோர் குழாமினுல் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வளர்ந்து வரும் ஆசிய அணி கிண்ணம் போட்டிகள் குழு A, குழு B என இரு குழுக்களாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குழு Aயில், இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான், ஓமான் குழு B யில் பாகிஸ்தான், பங்களாதேஷ் ஐக்கிய இராச்சியம், ஹொங்கொங் அணிகள் இடம்பெற்றுள்ளன.

இலங்கை அணியில், சரித் அசலங்க – தலைவர் சம்மு அசான் – உப தலைவர் கமிந்து மெண்டிஸ் அவிஷ்க பெனாண்டோ ஹசித பொயேகொட அசேல குணரத்ன சந்துன் வீரக்கொடி ஜெப்ரி வேண்டர்சே நிசன் மதுசங்க லசித் அம்புல்தெனிய நிசன் பீரிஸ் ச்சித் மதுசங்க அசித பெனாண்டோ சாமிக கருணாரத்ன ஜெ டேனியல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net