வெற்றி நடைபோடும் பிரம்மாண்ட தயாரிப்பு ‘2.O’!

வெற்றி நடைபோடும் பிரம்மாண்ட தயாரிப்பு ‘2.O’!

லைகா புரொடக்ஷனின் பிரம்மாண்டத் தயாரிப்பில், சுப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள் ‘2.O’ அடுத்து வரும் சில நாட்களில் புதிய பொக்ஸ் ஓஃப்பிஸில் சாதனைப் படைக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது

ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘2.O’ திரைப்படத்தில், அக்ஷய் குமார், எமி ஜாக்சன், சுதன்ஷு பாண்டே, ஆதில் உசைன், கலாபவண் சஜோன், மயில்சாமி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

மேலும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, நிரவ் ஷாவின் ஒளிப்பதிவு, ரசுல் புக்குட்டியின் ஒலியமைப்பு, முத்துராஜின் கலையமைப்பு என ‘2.O’ திரைப்படம், இந்திய சினிமாவின் மிகப் பிரம்மாண்டப் படைப்பாகவே வெளிவந்துள்ளது.

கடந்த 29 ஆம் திகதி ‘2.O’ திரைப்படம் உலகலாவிய ரீதியாக, சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படத்துக்கு, சிறப்பான விமர்சனங்கள் வந்துள்ளதோடு, தொடர்ச்சியாக ரசிகர்களும் பெருமளவில் வருகைத் தந்துக்கொண்டிருக்கின்றனர்.

‘2.O’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் மூன்றாவது நாளைக் கடந்துள்ள நிலையிலும், ஹவுஸ் புல் காட்சிகளாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.

குறிப்பாக படத்தின் திரைக்கதை, கிராபிக்ஸ் – வி.எப்.எக்ஸ் தொழில்நுட்பம், பின்னணி இசை, ஒளிப்பதிவு மற்றும் 4 டி ஒலியமைப்பு ஆகியன உலகத் தரத்தில் இருப்பதாகவும் இது இந்திய சினிமாவுக்கு ஒரு மைல் கல்லாகும் என்றும் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net