மஹிந்தவின் தலைவிதியை தீர்மானிக்கும் தீர்ப்பு!

மஹிந்தவின் தலைவிதியை தீர்மானிக்கும் தீர்ப்பு!

மஹிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் நியமிப்பதற்கு அதிகாரம் இல்லை என கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த மனு மீதான தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியில் செயற்படுவதற்கு சட்டரீதியான உரிமை இல்லை என அறிவித்து அவரை அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்குமாறும் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆராய்வதற்காக இன்றைய தினம் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தப்படுகின்றது.

இந்த வழக்கு இன்று காலை 11 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட அரசியல் கட்சிகளை அடங்கிய 122 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டடுள்ளது.

அரசியலமைப்புக்கு முரணான வகையில் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குற்றச்சாட்டாகும்.

இந்நிலையில் இன்றைய நீதிமன்ற தீர்ப்பு மஹிந்தவின் பிரதமர் பதவியை இல்லாமல் செய்யவும் வாய்ப்புகள் உள்ளதாக சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net