அமெரிக்காவுடன் வர்த்தகம் குறித்து பேசப் போவதில்லை: ஜேர்மன்

அமெரிக்காவுடன் வர்த்தகம் குறித்து பேசப் போவதில்லை: ஜேர்மன்

ஜேர்மன் கார் தயாரிப்பாளர்களுக்கும், அமெரிக்க நிர்வாகத்தினருக்கும் இடையிலான சந்திப்பு வர்த்தக நெருக்கடிகள் குறித்தது அல்ல என, ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

சூழல் மாசு தொடர்பான மாநாட்டின் பங்கேற்பாளர்களுடன் நேற்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜேர்மன் கார் தயாரிப்பாளர்களுக்கும், அமெரிக்க நிர்வாகத்தினருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.

ஜேர்மன் சார்பில் வர்த்தக நெருக்கடிகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், இந்த சந்திப்பில் தாம் வர்த்தகம் குறித்து பேசப் போவதில்லை என ஜேர்மன் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், கார் தயாரிப்பாளர்களும், ஜேர்மன் நிறுவனங்களும் அமெரிக்காவின் பாரிய தொழில்தருனர்களாகக் காணப்படுகின்ற நிலையில், முதலீடுகள் மற்றும் அவர்களது எதிர்காலம் என்பன குறித்து அமெரிக்காவுடன் கலந்துரையாட வேண்டிய நிறைய விடயங்கள் காணப்படுவதாக ஜேர்மன் அதிபர் சுட்டிக்காட்டினார்.

Copyright © 1798 Mukadu · All rights reserved · designed by Speed IT net