இலங்கையின் புதிய பிரதமர் யார்? மைத்திரியின் இறுதி முடிவு குறித்து கசிந்த தகவல்!
இலங்கையின் அடுத்த பிரதமராக யாரை நியமிப்பது என்பது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறுதி முடிவை எட்டியுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த, சமல் ராஜபக்ச அல்லது நிமல் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவையே நியமிக்க வேண்டும் என்று, ஐக்கிய தேசிய முன்னணி உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது.
ரணிலுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரதமர் பதவி வழங்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி பல தடவைகள் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நெருக்கடியான நிலையில் சமல் ராஜபக்ச, அல்லது நிமல் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என தெரிய வருகிறது.
மஹிந்தவை பிரதமராக நியமித்தமைக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை அடுத்து, இலங்கையில் தற்போது பிரதமரோ அமைச்சர்களும் பதவியில் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.