ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வழக்கு விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு
நிதி மோசடி விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இவ்வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
153 சதொச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் இச்செயற்பாட்டால் அரசாங்கத்திற்கு 40 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.