நெருக்கடிக்கு தீர்வுகாண ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்!
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு ஜனாதிபதி மற்றும் அரசியல் தரப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்தே தீர்வு காண வேண்டும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் அவர் மேதலும் தெரிவித்துள்ளதாவது,
இதுவரை காலமும் பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் ஜனநாயகத்திற்கு உட்பட்டது என்பதுடன், அனைத்துலக பாராளுமன்ற சங்கம் மற்றும் பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தில் சுட்டிக்காட்டப்படுகின்ற நிலையியல் கட்டளை மற்றும் அரசியலமைப்பு தொடர்பான சர்வதேச நிபுணர்கள் பாரர்ளுமன்ற நடவடிக்கையினை அங்கிகரித்துள்ளனர்.
இதனடிப்படையில் எந்த அரசியல் தரப்பினரையும் ஓரங்கட்டவோ அல்லது உயர்த்துவது சபாநாயகரின் கடமை அல்ல அவ்வாறு யாரேனும் குறை கூறுவார்கள் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரனையை ஜனநாயக முறையில் கொண்டு வருவதே முறையான முறையாகும்.
தற்போதைய அரசியல் நெருக்கடி காரணமாக நாட்டில் பாரிய பிரச்சியைகளே தோற்றுவித்துள்ளது. பொருளாதார வீழ்ச்சி மற்றும், தனிமனித வாழ்க்கையினையும் பாதித்துள்ளது.
தாய் நாட்டின் கௌரவத்தினையும், ஜனநாயக கோட்பாடுகளையும் பாதுகாக்க வேண்டிய தேவை அனைவருக்கும் காணப்படுகின்றது.
பாராளுமன்றத்தின் கோட்பாடுகளை பின்பற்றுவது பாராளுமன்றத்தில் அங்கிகாரம் பெற்ற அனைத்து கட்சிகளின் அரசியல் மற்றும் தனிப்பட்ட கடமையாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.