7 நாட்களுக்குள் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு ; ஜனாதிபதி அதிரடி உத்தரவு
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு எதிர்வரும் 7 நாட்களுக்குள் தீர்வு எட்டப்படுமென ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சம்மேளனம் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று இடம்பெற்றது.
இதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற ரீதியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசியல் நெருக்கடி இன்னும் 7 நாளில் நிறைவுக்குக் கொண்டுவர முடியும். இதனை நான் உறுதியாக கூறுகிறேன்.
நான் பிரச்சினையை ஏற்படுத்தவில்லை. ரணிலே பிரச்சினைக்குக் காரணம் . எனவே இந்த நிலைமையை மாற்ற நான் எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு தாருங்கள்.
நல்லாட்சியின் கொள்கைகளை ரணில் சீரழித்த போது நான் பொறுமை காத்தேன். ராஜபக்ச ஆட்சியில் நான் இருந்த பொறுமையை விட நான் இதில் பொறுமை காத்தேன் .
நல்லாட்சியின் கொள்கையையும் சீரழித்து ஐக்கிய தேசியக் கட்சியையும் சீரழித்தது என்னையும் சீரழித்தமையால் நான் பிரதமர் பதவியிலிருந்து ரணிலை விரட்டியடித்தேன்.
வடக்கு மக்களை ஏமாற்றினார். தீர்வு கொடுக்க வாய்ப்பிருந்தும் அவர் அதை செய்யவில்லை. ஏமாற்றினார்.
அவுஸ்திரேலியா, ஜேர்மன், இத்தாலி போன்ற நாடுகளில் ஆட்சி நிலைமைகளைப் பாருங்கள். அங்கு அரசுகள் இல்லாமலேயே அங்கு ஆட்சி நிலவுகின்றன.