அலரி மாளிகைக்குள் இந்திய மந்திரவாதிகள்!

அலரி மாளிகைக்குள் இந்திய மந்திரவாதிகள்!

இலங்கையில் அரசியல் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமரின் உத்தியோகபூர்வமான வாசஸ்தலம் பலரின் அவதானத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

அலரி மாளிகையில் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினர் தங்கியுள்ளார்.

இந்நிலையில் அலரி மாளிகைக்குள் மந்திரதந்திர வேலைகள் இடம்பெற்று வருவதாக மஹிந்த தரப்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய மந்திரவாதிகளின் தலைமையில் யாகங்கள், பூஜைகள் இடம்பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் இந்த யாகத்தின் போது சத்தமாக கூறப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஏற்பட்டுள்ள பலவீனமான கிரக நிலையை ஜனாதிபதிக்கு மாற்றுவதற்கு இந்த யாகம் மேற்கொள்ளப்படுவதாக குறித்த ஊடகம் கூறியுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 26ம் திகதி பிரதமர் பதவியில் இருந்த ரணில் விக்ரமசிங்கவை நீக்கி விட்டு, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார்.

அன்றைய நாள் தொடக்கம் இன்று வரை இலங்கையின் அரசியல் பெரும் ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

அரசியலமைப்பின்படி இலங்கையின் உத்தியோகபூர்வ பிரதமர் இப்போதும் தான் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்து வருவதுடன், அலரி மாளிகையில் தொடர்ந்தும் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net