அடுத்த பிரதமர் யார்? இரகசிய வாக்கெடுப்பு நடத்த தீர்மானம்!

அடுத்த பிரதமர் யார்? இரகசிய வாக்கெடுப்பு நடத்த தீர்மானம்!

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் பிரதமர் ஒருவரை தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக கட்சியின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரதமரை தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் அதன் பங்காளி கட்சிகள் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார்.

ஜனாதிபதியின் கருத்தை நிராகரிக்கும் ரணில் தானே பிரதமராக தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறார்.

ரணில் விக்ரமசிங்கவின் பிடிவாதம் காரணமாக ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் ஒன்றை உருவாக்கு சந்தர்ப்பம் இல்லாமல் போயுள்ள நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.

பிரதமர் வேட்பாளரை தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரபலங்களுக்கு இடையில் நீண்ட கலந்துரையாடல் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இரகசிய வாக்கெடுப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் 80 பேர் மாத்திரம் கலந்து கொள்ளவுள்ளனர்.

பிரதமரை பெயரிடுவதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதன் மூலம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் தெளிவான பதில் ஒன்றை பெற்றுக் கொள்ள முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரபலங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, அலரி மாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ வெளியிட்ட கருத்துக்களுக்கு அதிக பாராட்டுக்கள் கிடைத்துள்ளன.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியிடம் பெரும்பான்மை உள்ளமை நாடாளுமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரணில் விக்ரமசிங்கவை தவிர வேறு எவரை கொண்டு வந்தாலும் பிரதமராக நியமிப்பேன் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net