//anjeng வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்! இலங்கையில் ஏற்படவுள்ள காலநிலை மாற்றம்! | Mukadu

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்! இலங்கையில் ஏற்படவுள்ள காலநிலை மாற்றம்!

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்! இலங்கையில் ஏற்படவுள்ள காலநிலை மாற்றம்!

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் இலங்கைக்கு தென்கிழக்காக தொடர்ந்தும் நிலை வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

வட மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றர் அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் தென் கடற்பரப்புகளில் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net