11 மில்லியன் ரூபாய் செலவில் வீதிகள் புனரமைப்பு!

11 மில்லியன் ரூபாய் செலவில் வீதிகள் புனரமைப்பு!

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் 2018ஆம் ஆண்டுக்கான கிராமிய வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் 11 மில்லியன் ரூபாய் செலவில் 11 கிராமிய வீதிகள் கொங்கிரீட் வீதிகளாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.

இவ்வேலைத்திட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த போது பல்வேறு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்திருந்தார்.

அதில் கிராமிய வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் காத்தான்குடி, மண்முனை பற்று பிரதேசங்களில் உள்ள 11 கிராமிய வீதிகள் தெரிவு செய்யப்பட்டு அவை கொங்கிரீட் வீதிகளாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்திருந்தார்.

அதற்கமைய, காத்தான்குடியில் உள்ள பதுரீயா பள்ளி வீதி, உமர் ஷரீப் முதலாம் குறுக்கு வீதி, அமானுல்லா அலாவூதீன் மில் வீதி, அன்வர் மஸ்ஜித் வீதி, மையவாடி 7ஆம் ஒழுங்கை, ரிஸ்வி நகர் அல் இக்பால் பாடசாலை வீதி, மெத்தைப் பள்ளி உள்ளக வீதி மற்றும் நூராணியா மையவாடி வீதி முதல் கடற்கரை வீதி வரை ஆகிய வீதிகள் முதல் கட்ட பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், சிறு நாவலடி வீதி, ஹைராத் வீதி முதலாம் குறுக்கு வீதி மற்றும் பகீர் மொஹிடீன் வீதி ஆகியன மண்முனைப்பற்று பிரதேசத்தில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net