வவுனியாவில் உணவு விநியோகஸ்தருக்கு நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு!
வவுனியாவில் துருப்பிடித்த கொள்கலனில் சமையல் மற்றும் உணவு விநியோகம் செய்த விநியோகஸ்தருக்கு நீதிமன்றம் 1இலட்சத்தி 10ஆயிரம் ரூபா தண்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஓமந்தை பொது சுகாதாரப்பரிசோதகர் க.சிவரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியாவில் பிரபல்யமான சமையல் எண்ணை விநியோகஸ்தர் ஒருவர் தனக்குச் சொந்தமான பாரஊர்த்தி ஒன்றில் துருப்பிடித்த நிலையிலிருந்த கொள்கலன் மற்றும் இயந்திர ஒயில் எஞ்சின் பரல் என்பனவற்றில் சமையலுக்குப்பயன்படுத்தும் எண்ணையை களஞ்சியப்படுத்தி விநியோகம் மேற்கொண்டு வந்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி ஓமந்தை பொது சகாதாரப்பரிசோதகர் க.சிவரஞ்சன் தனது வழமையான பரிசோதனை நடவடிக்கையின்போது ஓமந்தைப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யும் பார ஊர்த்தியை வழிமறித்து பரிசோதனைக்குட்படுத்தியபோது வாகனங்களுக்கு இயந்திரத்திற்கு பயன்படுத்தப்படும் இஞ்சின் ஒயில் அடைக்கப்பயன்படுத்தப்படும்.
இந்நிலையில், 210லீற்றர் பரல் மற்றும் துருப்பிடித்த 800லீற்றர் கொள்கலனில் சமையலுக்குப்பயன்படுத்தப்படும் எண்ணையை களஞ்சியப்படுத்தி விற்பனைக்கு எடுத்துவரப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவற்றை கைப்பற்றியதுடன் மேலும் பாரஊர்த்தியில் எடுத்துச் செல்லப்பட்ட உணவுப் பொருட்களுக்கு சுற்றுத்துண்டு ஒழுங்கு விதிகளுக்கு முரனாக பொதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டு பொருட்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டது.
இந்நிலையில், குறித்த விநியோகஸ்தர் மற்றும் உற்பத்தியாளருக்கு எதிராக வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் 3 வழங்குகள் ஓமந்தை பொது சகாதாரப்பாசோதகரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேற்படி வழங்குகள் இன்றைய தினம் விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது எதிராளி குற்றத்தை ஏற்றுக்கொண்டதற்கு இணங்க 3 வழக்குகளுக்கும் 1இலட்சத்தி 10ஆயிரம் ரூபா நீதிமன்றத்தினால் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட பொருட்களை அழித்துவிடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்மை குறிக்பிடத்தக்கது.