இடைக்கால அரசாங்கத்தில் பணியாற்றிய ஐவருக்கு எதிராக பிரேரணை!
மஹிந்த தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தில் பணியாற்றிய அரச அதிகாரிகள் ஐவரை பாராளுமன்ற சிறப்பு விசாரணைகளுக்கு அழைக்குமாறு கோரி பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அமைச்சுக்களின் செயலாளர்களான சிறிசேன அமரசேகர, எஸ். ஆர். ஆடிகல, பெனால்ட் வசந்தபெரேரா, உபாலி மாரசிங்க மற்றும் எஸ்.டி. கொடிகார உள்ளிட்டோரை விசாரணை செய்யவதற்காகவே இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக்க தெரிவித்தார்.
அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அத்துடன் இந்த விசாரணைக்கான பிரேரணை கடந்த வெள்ளிக்கிழமை சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற பொது செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.