இலங்கை மனித உரிமை நிலவரங்களை உன்னிப்பாக அவதானிக்கும் பிரித்தானியா!
இலங்கையின் மனித உரிமை நிலவரங்களை பிரித்தானியா உன்னிப்பாக அவதானித்து வருகிறது.
மனித உரிமைகள் காப்பாளர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படுவதை தாம் அறிந்துள்ளதாக பிரித்தானியாவின் மனித உரிமைகள் துறை அமைச்சர் அஹ்மட் பிரபு தெரிவித்துள்ளார்.
2018ஆம் ஆண்டுக்கான சர்வதேச மனித உரிமைகள் நிலவரம் தொடர்பான இடைக்கால அறிக்கையிலேயே இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை உட்பட்ட 30 நாடுகளின் மனித உரிமை பிரச்சினைகளை பிரித்தானியா, கவனித்து வருகிறது.
இதேவேளை இலங்கையின் ஆட்சி நிர்வாகத்தில் பெண்களின் பங்கு அதிகரித்துள்ளமையையும் தாம் அவதானித்துள்ளதாக அஹ்மட் பிரபு குறிப்பிட்டுள்ளார்.
2008- 2011 ஆண்டுக்காலப்பகுதியில் உள்ளுராட்சி தேர்தலில் 91 பெண்கள் மாத்திரமே தெரிவாகினர்.
எனினும் கடந்த பெப்ரவரியில் 1919 பெண்கள் தெரிவாகினர் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.