நாமல் குமாரவின் தொலைபேசியுடன் ஹொங்கொங் நோக்கிச் சென்ற குழுவினர்!
நாமல் குமாரவின் தொலைபேசியில் இருந்து அழிக்கப்பட்ட ஒலிப்பதிவுகளை மீள பெற்றுக்கொள்வதற்காக குழு ஒன்று ஹொங்கொங் நோக்கி சென்றுள்ளது.
இந்த குழுவில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இருவர் உட்பட அரச இராசயன பகுப்பாய்வாளர் ஒருவரும் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் ஊடக பிரிவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளனர்.
நேற்று (08) இரவு குறித்த மூவரும் ஹொங்கொங் நோக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாமல் குமாரவின் தொலைபேசியுடன் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவையும் அவர்கள் எடுத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.