பிரதமர் செயலகத்தை விட்டு வெளியேறிய மஹிந்த!

பிரதமர் செயலகத்தை விட்டு வெளியேறிய மஹிந்த!

சர்ச்சைக்குரிய பிரதமராக செயற்பட்ட மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவைக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நீதிமன்ற இடைக்கால தடை உத்தரவைதை் தொடர்ந்து மஹிந்த பிரதமர் செயலகத்தை விட்டு சென்றுள்ளார்.

எனினும் மஹிந்த ராஜபக்சவுக்கு முன்னர் பிரதமராக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க தற்போதும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையில் தங்கியிருக்கின்றார்.

ரணில் விக்ரமசிங்க உட்பட ஐக்கிய தேசிய கட்சியினால் தொடர்ந்து பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லம் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், அதற்கு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net