தமிழர் பகுதியின் அபிவிருத்திக்காக நிதி! மீண்டும் திறைசேரிக்கு சென்ற கொடுமை!
கிராமங்களின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் நிதிகள் திறைசேரிக்கு திரும்பிச்சென்றது வரலாற்றில் நாவிதன்வெளி பிரதேசத்தில் முதல் தடவை . இது
குறித்து பிரதேசசபை உறுப்பினர்கள் அதிருப்த்தியை வெளியிட்டனர்.

2019 ஆண்டிற்கான உத்தேச வரவுசெலவு திட்டம் அனைத்து உறுப்பினர்களாலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதன்போது இடம்பெற்ற விவாதங்களில் நாவிதன்வெளி பிரதேசசபை உறுப்பினர் முருகப்பன் நிறோஜன் அவர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
பிரதேசத்திற்கு அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படாமல் திறைசேரிக்கு திரும்பிள்ளதாகவும் அவ்வாறு கிராமத்தின் வளர்ச்சிக்கு தடையாகும் இவ்வாறன பொறுப்பற்ற செயற்பாடுகளுக்கு மக்களோடு மக்களாக இருக்கின்ற உறுப்பினர்களாகிய எம்மீதே இந்த கேள்விகணைகள் தொடுக்கப்படுகின்றன என்றார்.
இதற்கான பொறுப்புக்கூறல் தவிசாளரா? பிரதேச செயலாளரா? என்று தெரியவில்லை ஒன்பது மில்லியன் ரூபா அபிவிருத்திக்கான நிதி திரும்பியுள்ளது. பிரதேச செயலகத்தினால்
சங்கங்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் காரணம். அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக ஆலையடிவேம்பு, திருக்கோவில் போன்ற பிரதேசங்களில்
பிரதேச செயலகங்களினால் இவ்வாறான நிபந்தனைகள் தளர்த்தப்பட்டு கம்பரலிய போன்ற வேலைத்திட்டங்கள் இடம்பெறுவதாக குற்றம்சாட்டினார்.
நாவிதன்வெளி பிரதேசத்திற்கு அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதி திறைசேரிக்கு திரும்பிச் சென்றது பிரதேச வரலாற்றில் முதற்தடவை. இவ்வாறான சம்பவங்களினால் மக்களுக்கு
பொறுப்புக்கூற வேண்டியவர்களாக இருக்கின்றோம். எனவே எதிர்காலங்களில் பிரதேசசபையின் மேற்பார்வையின் கீழ் பிரதேசத்தின் அபிவிருத்திகள் இடம்பெற வேண்டுமென சுட்டிக்காட்டினார்.
இதன்போது பதிலளித்த தவிசாளர் தவராசா கலையரசன்,
இந்த முறை அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அனைத்தும் பிரதேச செயலகங்களினூடாகவே இடம்பெற்றிருந்தன. குறிப்பாக கிராம அபிவிருத்திச்சங்கங்கள், மாதர்சங்கங்கள்,
சனசமூகநிலையங்களினூடாகவும் இடம்பெற்று வந்தன. வேலைத்திட்டத்தை மேற்கொள்ளும் அமைப்புக்களின் வங்கி சேமிப்பு கூற்று குறைந்தபட்சம் நான்கு இலட்சம்
இருக்கவேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் கம்பரலிய,தேசிய நல்லிணக்க அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட (REEP) அபிவிருத்தி வேலைத்திட்டம்,நகரதிட்டமிடல் அமைச்சின்
வேலைத்திட்டங்கள் இடம்பெற்றன. அவ்வாறு வங்கியின் சேமிப்பு கணக்கில் பண வைப்பு இல்லாத அமைப்புகளின் வேலைத்திட்டத்தை பிரதேச சபையின் மேற்பார்வையின் கீழ்
மேற்கொள்வதற்கு அணுகியதாகவும் அவற்றை பிரதேச செயலகம் நிராகரித்ததாக தவிசாளர் பதிலளித்தார்.
பின்தங்கிய கிராமப்புற மக்கள் விஷேட தேவையுடையவர்கள் பிரதேசத்தின் வளங்கள் பிரதேச அவர்களுக்கு பயன்படவேண்டுமென தெரிவித்தார்.