மஹிந்த உட்பட 49 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நீதிமன்றத்தில் முன்னிலை!

மஹிந்த உட்பட 49 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நீதிமன்றத்தில் முன்னிலை!

பிரதமராகவும் அமைச்சர்களாகவும் செயற்படுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 49 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்றைய தினம் (புதன்கிழமை) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று கூடிய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டத்திலேயே இவ்விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எவ்வாறு அமையும் என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

அந்தவகையில் நீதிமன்றத் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவும் ஒன்றாக இணைந்து எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் உறுதியான தீர்மானங்கள் சில எட்டப்பட்டுள்ளதாகவும் அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்விலும் கட்சி தலைவர்களின் கூட்டத்திலும் பங்கேற்பதில்லை என்றும் குறித்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net