கொழும்பு லேக் ஹவுஸ் அலுவலகத்தில் பதற்ற நிலை!

கொழும்பு லேக் ஹவுஸ் அலுவலகத்தில் பதற்ற நிலை!

வெளிவந்துள்ள நீதிமன்றத் தீர்ப்பினையடுத்து கொழும்பு லேக் ஹவுஸ் அலுவலகத்தில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றம் கலைக்கபட்டமையானது அரசியலமைப்புக்கு முரணானது என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது கொழும்பு அரசியலில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், மகிந்த தரப்பினரை கலக்கமடையச் செய்துள்ளது.

இந்நிலையில் இந்த தீர்ப்பின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு என்றும் சிலாகித்துக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையில் கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொழும்பு லேக் ஹவுஸ் அலுவலகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீர்ப்பிற்குப் பின்னர் குழு ஒன்று உள்நுழைய முற்பட்ட வேளையிலேயே இந்தப் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எனினும் அந்தப் பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net