சம்பந்தன் வெளியிட்டுள்ள கருத்து! ஆவண விடையம் உண்மையா?
ஐக்கியதேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் ஆவணமெதிலும் கைச்சாத்திடவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவும் இலங்கை தமிழரசுக்கட்சி- தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராகிய நானும் இணைந்து கைச்சாத்திட்டதாக தெரிவிக்கும் ஆவணமொன்று வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது சம்பந்தன் இவ்வாறு குறிப்பிடுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைவருடன் இணைந்து நான் அவ்வாறான ஆவணம் எதிலும் கைச்சாத்திடவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அவ்வாறான ஆவணம் போலியானது என்பதையும் நான் தெரிவிக்க விரும்புகின்றேன் என்றும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு அவருக்கு ஆதரவாக வாக்களித்தது.
இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பானது ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது என்றும், அதன் அடிப்படையிலேயே ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து வாக்களித்துள்ளது என்றும் மகிந்த ஆதரவு அணியினர் குற்றம் சாட்டி வந்தனர்.
இது தொடர்பாக மகிந்த தரப்பினர் கடும் விவாதங்களை பொது வெளியில் வெளியிட்டு வந்துள்ள நிலையில் சம்பந்தன் அதனை முற்றாக மறுத்துள்ளார்.