ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக குற்ற பிரேரணை!
மக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை கொண்டுவர முடிவு செய்துள்ளது.
நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு இன்று வெளியானது.
அதில் நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி வௌியிட்ட வர்தமானி அறிவித்தல் அரசியலமைப்புக்கு விரோதமானது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பத்திரிகையை கொண்டுவர மக்கள் விடுதலை முன்னணி முடிவு செய்துள்ளது.