மஹிந்தவின் கோட்டைக்குள் பதற்றம்! வன்முறையில் ஈடுபட்ட மக்கள்!மஹிந்தவின் கோட்டைக்குள் பதற்றம்! பொலிஸ் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கோட்டையான ஹம்பாந்தோட்டையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தங்காலை பொலிஸ் பிரிவின் கட்டுவன பொலிஸாருக்கு எதிராக கிராம மக்கள் நேற்றிரவு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமையினால் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

நேற்று மாலை கட்டுவன பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் உற்பத்தி செய்யும் இடத்தை சுற்றிவளைக்க சென்ற பொலிஸாரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 50 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து கிராம மக்கள் பொலிஸாரை சுற்றிவளைத்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

கடும் கோபமடைந்த கிராம மக்களினால் பொலிஸார் மீது கற் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பிரதேசத்தில் டயர் எரித்து பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் 4 பொலிஸார் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் பாதுகாபபு நடவடிக்கையில் விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறுதியில் கண்ணீர் புகை மேற்கொண்டு பொது மக்களை அவ்விடத்தில் இருந்து கலைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net