ரணில் – சம்பந்தன் உடன்படிக்கை போலியானது!
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இடையில் கையெழுத்திடப்பட்டுள்ளதாக கூறி வெளியாகியுள்ள செய்திகளை ஐக்கிய தேசியக்கட்சி நிராகரித்துள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள போலி உடன்படிக்கை தொடர்பாக விசாரணை நடத்துமாறு கோரி, ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
இது போலி ஆவணம் எனவும் அது நாட்டை ஸ்திரமற்ற நிலைமைக்கு கொண்டு நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மரிக்கார் கூறியுள்ளார்.