வடக்கு சிரியாவில் கார் குண்டு தாக்குதல்! ஒருவர் பலி! 21 பேர் படுகாயம்!

வடக்கு சிரியாவில் கார் குண்டு தாக்குதல்! ஒருவர் பலி! 21 பேர் படுகாயம்!

வடக்கு சிரியாவில் அசாஸ் நகரில் இடம்பெற்ற கார் குண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளதாக White Helmets சிவில் பாதுகாப்பு நிறுவனத்தை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த வெடிப்பு சம்பவமானது அங்கு உள்ள ஒரு உள்ளூர் மருத்துவமனைக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் White Helmets சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள் மற்றும் துருக்கிய மனிதாபிமான நிவாரண அறக்கட்டளை பணியாளர்கள் பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இந்த குண்டு தாக்குதலால் ஆரம்ப பாடசாலை உட்பட பல கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த தாக்குதலுக்கு தற்போதுவரை எந்த ஒரு குழுவும் பொறுப்பேற்கவில்லை.

அத்தோடு காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net